Wednesday 17 December 2014

ஜாதி வெறி பிடித்த இந்திய கிறிஸ்தவர்கள்

பறையர்களையும், பள்ளர்களையும் மட்டம் தட்டுவதே பிற இனத்தவர்களின் வேலைகளாக இருக்கின்றது. ஒதுங்கி போக தான் இவர்கள் கிறிஸ்துவத்தில் சேர்ந்து இருக்கின்றார்கள் ஆனாலும் அங்கும் பிற இனத்தவர்கள் நுழைந்து விட்டு அதிகமான dominate செய்து பல்லுபறையர்களை புறக்கநிகின்றார்கள். மறைமுகாக செய்தாலும் நேரடியாக செய்தாலும் தீண்டாமை என்பது குற்றம் தான். இந்த குற்றத்தின் கீழ் தண்டனை பெற தகுதியான இடம் முதலில் கிறிஸ்துவ தேவாலயங்கள் அதன் பின் தான் இந்துக்கள்.
இந்திய சுதந்திரம் பெற்றதிற்கு பின் , அடக்குமுறை ஜாதிகளுக்கு  அஞ்சி இந்து தலித் திராவிடர்கள் கிறிஸ்தவர்களாகவும், இஸ்லாமியரகவும் மதம் மாறி விட்டனர். கிறிஸ்துவத்தில் இருக்கின்ற வருமானம் மற்றும் சலுகைகளை பார்த்து தலித்துகளுக்கு இவை கிடைக்க கூடாது என்று பிற ஜாதியினர் தலித் மக்களை புறக்கணிக்க மதம் மாறினார்கள் இதுவரை அந்த காரியத்தை தான் செம்பட செய்து கொண்டு இருகின்றார்கள். தேவாலயங்களில் நடப்பது  பூசை இல்லை அது மறைமுகமான ஜாதி கூட்டம் தான். கிறிஸ்துவ நாடார்கள் ஒரு கூட்டம் தொடக்கி ஜபம் செய்தால் "கிறிஸ்துவ நாடர்களின் விசுவாசிகள்" மட்டும் தான் போவார்கள் அவர்களுக்கு சிறந்த சலுகைகள் செய்து தரப்படும். பறையர்,பள்ளர் pastor கள் ஜபம் நடத்தினால் அங்கு கிறிஸ்துவ நாடார்கள், கிறிஸ்துவ பிள்ளைகள், கிறிஸ்துவ முதலியார்கள், etc., செல்ல மாட்டார்கள். "கடவுள் வேண்டுமானால் ஜாதி இல்லாமல் இருக்கலாம் ஆனால் பூசை செய்பவன் ஒரு ஜாதியில் இருந்து பிறந்தவன் தானே".  இதில் பெருமை மிக்க விஷயம் கேரளா கிறிஸ்தவர்களுக்கு மட்டும் இந்தியாவில் எங்கும் ஜாதி இல்லை அவர்கள் "கேரளா கிறிஸ்துவர்கள்" என்று பொதுவாக அழைக்கப் படுகின்றர்கள், அல்லது சிரியன் கிறிஸ்தவன் என்கின்ற அவர்களது சர்ச் பெயரில் அழைக்கப் படுவார்கள், வாழ்க கேரள கிறிஸ்தவர்கள். இது போன்று ஜாதி ஒழிய தானே தந்தை பெரியார் ஆசைப்பட்டார்.

இஸ்லாமியத்திற்கு மாறின தலித்திற்கு எந்த ஏற்ற தாழ்வுகளும் இன ரீதியாக இல்லை. அவர்கள் இஸ்லாமியர்களாக தான் வாழ்த்து வருகின்றார்.  தலித்-இஸ்லாமியர்கள் என்றால் மேல்ஜாதி இந்துக்களின் கொடுமைகள் அடக்குமுறைகளுக்கு பயந்து இஸ்லாம் மதத்திற்கு மாறின தலித்துகள் களே. உருது தாய்மொழியாக இல்லாத அணைத்து இஸ்லாமியர்களும் தலித் convert தான்.

சமீபத்தில் நவீன தீண்டாமை பற்றி பத்திரிக்கைகளில் படித்தேன்.

                டிஜிட்டல் தீண்டாமை - Digital Untouchability
சென்னையில் நல்ல சம்பளத்தில் IT நிறுவனத்தில் இருப்பவர் P.ஜெயன் (இவர் தலித் இல்லை). ரோமன் கத்தொலிய கிறித்தவ மதத்தைச் சேர்ந்த இவர் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் கிறிஸ்துவ திருமணப்பதிவு மையங்களிலும் பணம் செலுத்தி பதிவு செய்து இருந்தார்.
அவருடைய வயதுக்கேற்ப ஒரு பெண்ணின் விபரங்கள் தமிழ்மேட்ரிமோனி.காம் இணையதளத்தில் கிடைத்தது.பெண் பார்பதிர்க்கு மிக அழகாக இருந்தார். மதம் என்பதற்கு எதிராக கிறித்தவர்-புரோட்டஸ்டன்ட் என்று அந்தப்பெண் குறிப்பிட்டிருந்தார். அடுத்தபடியாக, சாதி என்பதற்கு எதிராக சாதி ஒரு தடையில்லை என்பதாக (caste is no bar) என்று குறிப்பிட்டதைப் பார்த்தவுடன் ஜெயனுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கிறது. ஆனால் அது ஒரு விநாடி கூட நிலைக்கவில்லை. சாதி ஒரு தடையில்லை என்பதற்கு அடுத்து அடைப்புக்குறிகளுக்குள் எஸ்.சி,எஸ்.டி நீங்கலாக(SC/ST excuse) என்று குறிப்பிடப்பட்டு இருந்திருக்கிறது. எவ்வளவு நாசூக்கு!
மதம் மாறியும் இந்தச் சாதிப் பீடை ஒழிய மாட்டேன்கிறதே என்று கோபமடைந்த ஜெயன், அந்தப் பெண்ணின் தொடர்பு எண்ணை டயல் செய்து ஆத்திரத்துடன் கேள்விகள் எழுப்பி இருக்கிறார். “இந்த சாதியில் மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்கலாம். இந்த சாதியில் வேண்டாம் என்று சொல்வதற்கு நீங்கள் யார்?” என்ற அவரது குமுறல் மிக நியாயமானது. ஆனால் மறுமுனையில் அந்தப் பெண்மணியோ எந்தவிதக் குற்றவுணர்வும் இல்லாமல் கேட்டார் நீங்கள் என்ன ஜாதி என்று.பதில் கிறிஸ்துவன் என்றார். நானும் கிறிஸ்துவல் தான் அதில் எந்த ஜாதி என்றார், ஒக்காமக்கா  எல்லா ஜாதிகளையும் ஒப்புக்கொள்ள முடிகிற ஒருவர், எஸ்.சி/எஸ்.டி ஜாதியை மட்டும் விலக்கி வைப்பது பெரும் அவமானமாக இருக்கிறது.
சாதி தடையில்லை என்று போட்டுவிட்டு, இவ்வாறு எஸ்.சி மற்றும் எஸ்.டியாக இருந்தால் வேண்டாம் என்பதை குறிப்பிடும்படியாக மென்பொருளை (SC/ST excuse) உருவாக்கியிருக்கும் திருமணப்பதிவு இணையதளம் முதலில் கண்டிக்கப்படவேண்டும் என்கிறார் ஜெயன்.  உண்மைதான். இவ்வகை தீண்டாமையை, ஒரு  தெரிவாக (option) ஆக இணையதளத்தில் வடிவமைத்திருப்பது, சமூகத்தில் இருக்கும் அழுக்குகளை ஒப்புக்கொள்வதாயும், மேலும் வளர்ப்பதாயும் இருக்கிறது.  
பத்திரிகைகள் அலுவலகங்களுக்கும் தொலைபேசியில் கோபத்தோடு பேசிய ஜெயன், இது ஒரு நவீன தீண்டாமை என்று பொரிந்து தள்ளியிருக்கிறார். இது தனது முதல் அனுபவமல்ல என்கிறார் அவர். கிறித்தவ திருமணத் தகவல் தொடர்பு மையங்கள் அனைத்திலும், சாதி பார்க்க மாட்டோம், ஆனால் தலித் என்றால் வேண்டாம் என்று கூறும் பழக்கம் இருக்கிறது என்று வேதனையோடு குறிப்பிடுகிறார் அவர். நான் போடாமலேயே எனது சர்ச் பதிவில் எனது profile லில்  SC/ST Excuse என்று போட்டு இருக்கின்றார்கள். என்றார்.
இதற்க்கு அர்த்தம் இந்த caste no bar என்கின்ற விதி  SC/ST களுக்குப் மட்டும் பொருந்தாது. Excuse என்றால் தவிர்க்கவும் என்கின்ற பொருளும் உண்டு.   ‘எக்ஸ்கியூஸ் மீ’ என்பதை நாகரீக வார்த்தையாக நம்மில் பலரும் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம். ஆனால், இறுக்கமும், ஏற்றுக்கொள்ளவே முடியாத மூர்க்கத்தனமான பிடிவாதமும் கூட அந்த வார்த்தைக்கான அர்த்தமாக இருக்கிறது. ஆம், எல்லாவகை கற்பிதங்களும் சமூகத்திடமிருந்தும், இம்மனிதர்களிடமிருந்தும் தானே பிறக்கிறது? அந்த சாப்ட்வேர் என்ன, தானாகவா முளைத்திருக்கும்? எவ்வளவு அழுக்குகள்தான் இந்த சமூகத்தின் மூளைக்குள் அடைந்து கிடைக்கின்றன!
Best Comments : 
இந்துக்கள் என்னதான் மதம் மாறினாலும் தனது ஜாதியை விட்டு தர மனது தயங்குகிறது. ஏனென்றால் அது அவர்களது இரத்தத்தில் ஊறியது. மேலும், யாரும் இந்து மதத்திலிருந்து மற்ற மதத்திற்கு மாறினாலும், தனது இந்து அடையாளத்தை அழிக்க இயலாது. நாடார் என்பதோ, முதலியார் என்பதோ இந்து மதத்தில் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு உட்பிரிவு என்பது அனைவரும் அறிந்ததே. எனவே நாடார் என்றாலும், இந்து என்றாலும் ஒன்றே. அதன் படி, ஒருவர் நாடார் கிறிஸ்டியன் என்று எழுதுவது இந்து கிறிஸ்டியன் என்று எழுதுவதற்கு சமம். அமெரிக்காவில் இருக்கும் ஜார்ஜ் புஷ், என்ன நாடாரா இல்லை முதலியாரா? கிறிஸ்துவ மதத்தில் நாடார், முதலியார் போன்ற பிரிவுகள் இல்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களும், இந்து மதத்தின் அடிப்படையில் தான் அமைந்து உள்ளது. இதற்க்கு, கிறிஸ்தவ, முஸ்லிம் மதமோ விதிவிலக்கு இல்லை.
ஒரு முறை நான் பார்த்த ப்ரோபைல் ஒன்றில் இருந்த வாக்கியம் "caste no bar for IAS, IPS or grade a officers". இது எப்படி ?
ஜாதி மதம் தடை இல்லைன்னு சொல்லுறவன் வாழ்க்கைய உணர்ந்து சொல்லவில்லை.
யூதர்கள் கலீலே என்ற பகுதியில் சுமெரியர்களை வைத்திருந்தார்கள்.சுமெரியர்கள் தீண்டத்தகாதவர்கள். அவர்கள் கையால் தண்ணிர் கூட குடிக்கமாட்டார்கள்.ஏசு மீதுள்ளகுற்றச்சாட்டில் ஒன்று தீண்டாமையை எதிர்த்தது.தன் சீடர்களொடு கலீலே சென்றுசுமெரியப்பெண்ணிடம் தண்ணீர் கெட்டு அருந்தினார் அவள் வீட்டிலேயே தங்கினார்.. .கிறுத்துவம் இந்திய வடிவம் கொள்ளும் போது சிதைகிறது.மதகுருமார்கள் அவர்கள் செய்யும் பாவங்களை மறைக்கவே முடியாமல் திணருகிறார்கள்.என்ன செய்ய? காஸ்யபன்.
 மனிதனாக பிறந்த அனைவரும் உயர்ந்தவர்களே Excuse SC/ST

1 comment:

  1. எனக்கு இந்த லாஜிக் தான் புரிய வில்லை, "SC/ST execuse. ஓகே" ஒட்டன் MBC, நாசுவன் BC, கொறவன் ஒருபிருவு MBC அப்படிஎன்றால்.... அப்படிஎன்றால் நீ ஒரு ஒட்டன்,நாசுவனை உன்வீட்டில் உட்காரவைத்து சம்பதம் பேசுவே தலித் தீட்டா? உண்மையாலும் இது நமது நாட்டின் மூத்த குடியினர் தலித்துகளையும் பழங்குடியினரையும் மிக அவமதிப்பது போன்று இருக்கின்றது.

    ReplyDelete